வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் பேசிய நடிகையின் கணவர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,August 26 2022]

பிரபல நடிகை தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் அவரது கணவர் பேசும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ என்ற திரைப்படம் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்த 201ஆம் ஆண்டு கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

கர்ப்பகால போட்டோஷூட் குறித்து பிபாஷா பாசு பதிவு செய்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிபாஷா பாசு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையுடன் தனது கணவர் பாட்டு பாடி பேசும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.