அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபர்: ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகி ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய நிலையில் அந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள பாடகி, இது குறித்து புகாரளிக்கவும் உள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பாடகி திவ்யா என்பது தெரிந்ததே. இவர் விஜய் நடித்த ’வில்லு’ விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யாவுக்கு அந்தரங்க வீடியோ ஒன்று மர்ம நபரிடம் இருந்து வந்துள்ளது. ஆணின் அந்தரங்க உறுப்பு காட்சிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த திவ்யா அதிர்ச்சி அடைந்து அதனுடைய ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கு Zoya Kait என்ற ஐடியில் இருந்து வந்த மெசேஜில், பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஐடி மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு அவன், ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என கேட்டான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் நீங்கள் உதவ வேண்டும் என்று கூறி அந்தரங்க வீடியோ அனுப்பிய நபரின் ஐடியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
பாடகி திவ்யாவின் இந்த பதிவை அடுத்து அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்ம நபருக்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments