ரஜினியின் 'காலா' படத்தில் பாடும் வாய்ப்பை பெற்ற பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை பிரபல பின்னணி பாடகர் விஜய்பிரகாஷ் பாடவுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெறும் ரஜினியின் அறிமுகப்பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் வாக்கெடுப்பு நடத்தி வைத்துள்ள சந்தோஷ் நாராயணன், இந்த பாடலை புதுவிதமாக உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த வித்தியாசமான பாடலைத்தான் விஜய்பிரகாஷ் பாடவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிரகாஷ் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'காதல் அணுக்கள்' பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்முறையாக ரஜினிக்கு அறிமுகப்பாடலை பாடவுள்ளது அவருக்கே இதுவொரு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்