ஜல்லிக்கட்டு உணர்வை பாடல் மூலம் பகிர்ந்து கொண்ட பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் தொடர்போராட்டம் நடத்தி வருவதால் தமிழகமே பரபரப்புடன் உள்ளது.
இந்நிலையில் பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன், பாடல் ஒன்றின் மூலம் தனது ஜல்லிக்கட்டு உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இவர் 'கொம்பன்' படத்தில் இடம்பெற்ற 'கருப்பு நிறத்தழகி' உள்பட பல பிரபலமான பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன் பாடிய ஜல்லிக்கட்டு பாடல் இதோ:
எங்களுக்கு வேணும் ஜல்லிக்கட்டு
இளைஞர் உலகம் காத்திருக்கு துள்ளிகிட்டு
பொங்கலுக்கு வேணும் ஜல்லிக்கட்டு
நாங்க புத்துணர்வு பெறுகின்ற விளையாட்டு
இன்றல்ல நேற்றல்ல தொன்றுதொட்டு
மிக நேர்த்தியுடன் நடந்து வந்த விளையாட்டு
நிற்கலாமா இதற்கு ஒரு தடை கேட்டு
நாங்கள் நிற்கின்றோம் நீதிமன்ற விடை கேட்டு
வேல்முருகன் பாடிய இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments