close
Choose your channels

பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம்: மிமிக்ரி கலைஞரை மணந்தார்

Tuesday, October 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தெறி', 'அறம்' உள்பட பல படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நேற்று நடைபெற்றது. மிமிக்ரி கலைஞரும் இண்டீரியல் டிசைனருமான அனுப் என்பவர் வைக்கம் விஜயலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் தமிழ், மலையாள திரையுலகினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'செல்லுலாய்டு' என்ற மலையாள படத்தில் பாடகியாக அறிமுகமான வைக்கம் விஜயலட்சுமி, முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த பாடகி விருதினை வென்றார். மேலும் 'நடன்' என்ற மலையாள படத்தில் பாடிய பாடல் ஒன்றுக்காக விஜயலட்சுமி கடந்த 21014ஆம் ஆண்டு பிலிம்பேர் விருதினை வென்றார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் முதல் படமான 'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடலில் வைக்கம் விஜயலட்சுமியும் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment