பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

பிரபல பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வை அடுத்து திரை உலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்திய இசை உலகில் பிரபல பாப் பாடகியாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருபவர் உஷா உதுப். இவரது கணவர் ஜானி ஜாக்கோ நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் வயது 78. இன்று கொல்கத்தாவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை உஷா உதுப் கணவர் ஜானி ஜாக்கோ வழக்கம்போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தது உஷா உதுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஜானி ஜாக்கோ மறைவை அடுத்து உஷா உதுப் குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பலர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்த உஷா, ஜானி ஜாக்கோவை கடந்த 1960ஆம் ஆண்டு முதன்முறையாக கொல்கத்தாவில் சந்தித்தார். அதன்பின் உஷா உதுப் பாப் பாடகராக ஜானி உதவி செய்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அஞ்சலி, சன்னி என இரு குழந்தைகள் உள்ளனர்.
 

More News

'டீன்ஸ்' ரன்னிங் டைம்.. இன்னும் 4 விநாடிகள் குறைந்திருந்தால் சாதனையா இருந்திருக்குமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. பா ரஞ்சித் கேட்ட 7 கேள்விகள்.. தமிழக அரசு பதிலளிக்குமா?

தமிழக பகுஜன் சமாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்,

குக் வித் கோமாளி அன்ஷிதாவா இவர்? பக்தி பழமாக மாறிய புகைப்படம் வைரல்..!

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதா பக்தி பழமாக மாறிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள

தமிழ் நடிகையுடன் அமைச்சர் சுரேஷ் கோபியின் மகன் காதல்.. செம்ம ரொமான்ஸ் பதிவு..!

பிரபல மலையாள நடிகர் மற்றும் அமைச்சர் சுரேஷ் கோபியின் இளைய மகன் தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்ஸ் பதிவு செய்துள்ளதை

என்னது உலகக்கோப்பையை ஜெயித்து கொடுத்தது ஹிப் ஹாப் தமிழா ஆதியா? அதிர்ச்சி வீடியோ..!

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் கோப்பையை வென்றது என்பதும் இதனை அடுத்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்தது. இ