பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

பிரபல பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வை அடுத்து திரை உலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்திய இசை உலகில் பிரபல பாப் பாடகியாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருபவர் உஷா உதுப். இவரது கணவர் ஜானி ஜாக்கோ நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் வயது 78. இன்று கொல்கத்தாவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை உஷா உதுப் கணவர் ஜானி ஜாக்கோ வழக்கம்போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தது உஷா உதுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஜானி ஜாக்கோ மறைவை அடுத்து உஷா உதுப் குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பலர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்த உஷா, ஜானி ஜாக்கோவை கடந்த 1960ஆம் ஆண்டு முதன்முறையாக கொல்கத்தாவில் சந்தித்தார். அதன்பின் உஷா உதுப் பாப் பாடகராக ஜானி உதவி செய்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அஞ்சலி, சன்னி என இரு குழந்தைகள் உள்ளனர்.