அக்சராஹாசன் பாட்டியாக நடிக்கும் பின்னணி பாடகி: 10 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் நடித்தவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் தமிழில் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் சமீபத்தில் டிரெண்ட் லவுட் என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பழம்பெரும் பாடகி ஒருவர் அக்சராஹாசனின் பாட்டியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பாடகி உஷா உதுப். ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ‘மன்மதன் அம்பு’ திரைப்படத்தில் உஷா உதுப் நடித்துள்ளார் என்பதும் 10 ஆண்டுகளுக்கு பின் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் ராஜமூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும். மேலும் 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே.
௮வர் இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, ௮க்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த ரடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் ௮வரது அன்பான இயல்பு, ௮வரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. ௮வர் முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
இறுதியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் ௮க்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு.
இவ்வாறு இயக்குனர் ராஜமூர்த்தி கூறியுள்ளார்.
Legendary @singerushauthup in @Trendloud first feature film! Just 4 more days for the first look!@kaiyavecha @aksharahaasan1 #AksharaHaasan #TrendloudOriginalFilm pic.twitter.com/sZvsfcDGua
— Diamond Babu (@idiamondbabu) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com