காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு.. வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலி குறித்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா’ என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. அதன்பிறகு அவர் பல படங்களில் பாடினார் என்றும் குறிப்பாக ’என்ஜாய் என்ஜாமி’ என்ற தனிப்பாடல் அவரை உலக அளவில் பிரபலம் ஆகியது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இதே பாடல் அவருக்கு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் தெருக்குரல் அறிவு தனது சமூக வலைத்தளத்தில் தனது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். "For miles together.. We are the wildest love of our ancestors kalpana_ambedkar என் திமிரான தமிழச்சி." என பதிவு செய்து காதலியின் கால்களை மட்டும் அவர் பதிவு செய்துள்ள போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து தெருக்குரல் அறிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கல்பனா அம்பேத்கர் என்பதுதான் தனது காதலியின் பெயர் என்று கூறிய தெருக்குரல் அறிவு அவருடைய கால்களை மட்டும் தற்போது காட்டினாலும் விரைவில் முழு புகைப்படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்பனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெருக்குரல் அறிவு குறித்த பல போஸ்ட் இருப்பதை அடுத்து இவர்கள் ஒரு சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments