God Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி!

பிரபல பாடகர் எஸ்பிபி நேற்று மறைந்த நிலையில் அவருடன் பழகிய சக பாடகர்கள், பாடகிகள் உள்பட பலரும் அவருடன் பழகிய மலரும் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகியும், எஸ்பிபியுடன் பல பாடல்களை இணைந்து பாடியவருமான பாடகி ஸ்வேதா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு எஸ்பிபி அனுப்பிய ஆடியோ மெசேஜை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறிய கடைசி வார்த்தை ‘God Bless You' என்பதுதான்; இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அன்புள்ள எஸ்பிபி சார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிடுவார் என்று ஒரு நாள் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதனை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை! நம் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பு தருணங்களிலும் அவர் தனது பாடல்களின் மூலம் வாழ்வார். ஆனால் இந்த இழப்பு வரவிருக்கும் நீண்ட காலத்திற்கு நம்மை துயரத்தில் ஆழ்த்தும்

இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி எனக்கு அவர் எனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜில் அவர் கூறிய கடைசி வார்த்தைகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்பதுதான். இந்த கிளிப்பை இன்று கனமான இதயத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். மற்ற பாடகர்களைப் பாராட்டுவதிலும், அவர்களுடைய திறமைகளை பாராட்டுவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அன்புள்ள எஸ்பிபி ஐயா, உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று பாடகி ஸ்வேதா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

More News

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் எஸ்பிபிக்கு இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது

பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா திடீரென அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர்

எஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் இன்று அவருடைய உடல் அவருடைய தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன்

எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர்