God Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகர் எஸ்பிபி நேற்று மறைந்த நிலையில் அவருடன் பழகிய சக பாடகர்கள், பாடகிகள் உள்பட பலரும் அவருடன் பழகிய மலரும் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகியும், எஸ்பிபியுடன் பல பாடல்களை இணைந்து பாடியவருமான பாடகி ஸ்வேதா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு எஸ்பிபி அனுப்பிய ஆடியோ மெசேஜை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறிய கடைசி வார்த்தை ‘God Bless You' என்பதுதான்; இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அன்புள்ள எஸ்பிபி சார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிடுவார் என்று ஒரு நாள் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதனை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை! நம் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பு தருணங்களிலும் அவர் தனது பாடல்களின் மூலம் வாழ்வார். ஆனால் இந்த இழப்பு வரவிருக்கும் நீண்ட காலத்திற்கு நம்மை துயரத்தில் ஆழ்த்தும்
இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி எனக்கு அவர் எனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜில் அவர் கூறிய கடைசி வார்த்தைகள் "கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்பதுதான். இந்த கிளிப்பை இன்று கனமான இதயத்துடன் பகிர்ந்துகொள்கிறேன். மற்ற பாடகர்களைப் பாராட்டுவதிலும், அவர்களுடைய திறமைகளை பாராட்டுவதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அன்புள்ள எஸ்பிபி ஐயா, உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று பாடகி ஸ்வேதா மோகன் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com