மாயா குடும்பத்தினர் கேஸ் போட போறாங்க.. பிரபல பாடகி கூறிய பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

மாயா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் பாடகியமான சுசித்ரா மீது மாயா குடும்பத்தினர் வழக்கு தொடர உள்ளதாக பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர் மாயாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது

மாயாவின் செயல்களை தவறாக சித்தரிக்கும் மற்றும் Lgbtq+ வாழ்க்கை சட்டத்திற்கு எதிராக Homophobic ஆக பரப்புரைக்கும் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர். பதில் சொல்லும் நிலையில் இல்லாத ஒரு நபர் மீது மக்கள் இல்லாத அவதூறு கருத்துக்களை வீசுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது.

தனக்கு வெளியுலகில் நிகழும் அவமானங்களையும் அநீதிகளையும் பற்றிய எந்த அறிதலும் இல்லாத சூழலிலும் மாயாவுக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி என்று ஸ்வாகதா கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

மாயா மீது பாடகி சுசித்ரா மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’ஆடை’ பட நடிகை அனன்யாவும் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,.

More News

மாயாவை கவிழ்க்கிறதுக்கு பூர்ணிமா சதின்னு எனக்கு தோணுது.. கரெக்டாக கணித்த போட்டியாளர்..!

பிக் பாஸ் வீட்டில் மாயா  அராஜகமாக நடந்து வருகிறார் என்பதும் குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா கமல் - சூர்யா படங்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2 'மற்றும் சூர்யா நடித்த 'கங்குவா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதீப் மீது கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமா? நெட்டிசன்கள் சொல்லும் பாயிண்ட்ஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன், ஒரு பிக் பாஸ் போட்டியாளரை வெளியேற்றுவதற்கு அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார். முதல் சீசனில் மக்களால் வெறுக்கப்பட்ட ஜூலியை கூட அவர் வெளியே

நாமினேஷனில் இருந்து விஷ்ணு தப்பிப்பது இப்படித்தான்.. சரவணன் விக்ரமின் மெகா கண்டுபிடிப்பு..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிகம் நாமினேஷன் செய்யப்படாத போட்டியாளர்களில் ஒருவர் விஷ்ணு என்பது தெரிந்ததே. அவர் இரண்டாவது வாரம் மற்றும் மூன்றாவது வாரம் மட்டுமே நாமினேஷன்

பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து விளக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்  பிக் பாஸ் டைட்டில் வின்னராக நான் தான் வருவேன் என நம்பிக்கை உடன் இருக்கும் விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம்