பீட்டாவுக்கும் ஆதரவு, ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு. பிரபல பாடகி

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

தற்போது இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமின்றி பீட்டாவுக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. இளையதளபதி விஜய் உள்பட பல திரையுலகினர்களும், போராட்டக்காரர்களும் இந்தியாவில் இருந்து பீட்டாவை வெளியேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் தான் பீட்டாவுக்கு ஆதரவு அளித்து நிதியுதவி செய்வதாகவும், மிருகங்களை தனது வீட்டில் வளர்த்து வருவதாகவும், அதே சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கும் தனது முழு ஆதரவு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை என் மக்கள் விரும்புகின்றனர். எனவே அரசே ஒருசில விதிமுறைகளை வகுத்து பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஸ்பெயினில் நடைபெறும் காளை சண்டைபோல தமிழக ஜல்லிக்கட்டை தவறாக பீட்டா புரிந்து கொண்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு என்பது காளையுடனான சண்டை இல்லை என்றும், அது காளைகளுடன் தழுவும் விளையாட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.