ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையானது: சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல பாடகி
- IndiaGlitz, [Friday,June 26 2020]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் நடத்தி வந்த செல்போன் கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் திறந்து வைத்ததாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டி அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் படுகாயமடைந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததாகவும் கூறப்படுகின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது
இந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தென்னிந்தியாவில் நடந்த இந்த சம்பவம் முழு இந்தியாவுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக இதனைத் தான் ஆங்கிலத்தில் கூறுவதாக தெரிவித்து ’தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் படுகாயமடைந்து இரண்டு நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் இந்த சம்பவம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான இரண்டு காவல்துறையினர் பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறிய சுசித்ரா, இந்த பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல என்றும் இது நீதி அல்ல என்றும் கூறியுள்ளார் இந்த சம்பவம் அமெரிக்காவில் ஜார்ஜ்ஃபிளாய்ட் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு இணையானது என்றும் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும் வகையில் இந்த வீடியோவை அனைவரும் ஷேர் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுசித்ராவின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
View this post on InstagramA post shared by ???????????????? (@mirchi_suchi) on Jun 25, 2020 at 10:07am PDT