ரூ.6.5 லட்சம் கட்டுனத்துக்கு அவ்ளோ புலம்பணுமா? ரஜினிக்கு பிரபல பாடகி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார் என்பதும் இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.
அதன் பின்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘ராகவேந்திரா மண்டப சொத்துவரி. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும் என்றும் தவறை தவிர்த்திருக்கலாம் என்றும் அனுபவமே பாடம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த பிரச்சினை குறித்து பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். 6.5 லட்சம் சொத்துவரி கட்டியதற்கு அவ்வளவு புலம்பலா? அதுவும் பொதுமக்கள் முன்னதாக... நடிகர் பிரசன்னாவுக்கு மின்சார கட்டணம் தவறாக பதிவு செய்தபோது அதை அவர் கட்டி விட்டார், என்பதையும் சுசித்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
சுசித்ராவின் இந்த டுவிட்டிற்கு நெட்டிசன்களும், ரஜினி ரசிகர்களும் பதிலளித்து வருகின்றனர். நடிகர் பிரசன்னாவுக்கு மின்வாரியம் தவறாக கட்டணம் பதிவு செய்யவில்லை. பிரசன்னா தான் தவறாக புரிந்து கொண்டு டுவீட் போட்டு அதன்பின்னர் வருத்தம் தெரிவித்தார். ரஜினிகாந்த் சொத்து வரி விஷயத்தில் அவர் ஏற்கனவே மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கைக்கு எந்தவித பதிலும் வராததால் நீதிமன்றம் சென்றார். மேலும் ரஜினி போன்றே திருமண மண்டப உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு ஏன் ரஜினி வழக்கில் பிறப்பிக்கப்படவில்லை. ஒரு வழக்கின் தன்மையை புரிந்து கொள்ளாமல் டுவீட் போட வேண்டாம் என்று நெட்டிசன்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சுசித்ராவின் டுவிட்டுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments