சிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. தந்தை மகன் கொலை விவகாரம் முதலில் உள்ளூர் பிரச்சினையாக மட்டும் இருந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்த ஒரு வீடியோ பதிவை அடுத்து நாடு முழுவதும் பரவியது
இதனை அடுத்து தான் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் இந்த கொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என குரல் கொடுத்தனர். அதன் பின்னரே மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது என்பதும் சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்தது என்பதும் முதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அதன் பின்னர் ஐந்து அதிகாரிகளும் என மொத்தம் 10 பேர் இந்த வழக்கில் கைது
செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வழக்கை ஏற்று நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பாடகி சுசித்ரா வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதுபோலீசாருக்கு எதிராக தூண்டி விடுவதை போல் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.
இதனை அடுத்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சாத்தான்குளம் வீடியோவை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் இன்னும் வைரலாகி வருகிறது என்பதும் விரைவில் சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று பலர் அந்த வீடியோவை தற்போது நீக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments