சிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. தந்தை மகன் கொலை விவகாரம் முதலில் உள்ளூர் பிரச்சினையாக மட்டும் இருந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்த ஒரு வீடியோ பதிவை அடுத்து நாடு முழுவதும் பரவியது

இதனை அடுத்து தான் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் இந்த கொலைக்கு நீதி விசாரணை வேண்டும் என குரல் கொடுத்தனர். அதன் பின்னரே மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது என்பதும் சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்தது என்பதும் முதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அதன் பின்னர் ஐந்து அதிகாரிகளும் என மொத்தம் 10 பேர் இந்த வழக்கில் கைது
செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வழக்கை ஏற்று நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பாடகி சுசித்ரா வீடியோவில் இருக்கும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதுபோலீசாருக்கு எதிராக தூண்டி விடுவதை போல் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை யாரும் நம்பவேண்டாம் என்றும் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை அடுத்து பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சாத்தான்குளம் வீடியோவை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் இன்னும் வைரலாகி வருகிறது என்பதும் விரைவில் சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று பலர் அந்த வீடியோவை தற்போது நீக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு

மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'மதராசபட்டணம்' என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் என்பது தெரிந்ததே.

காமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள்!!! ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்!!! ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள்!!!

போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 8 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை பற்றித்தான் தற்போது இந்தியா முழுக்க பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.