'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு செல்கிறாரா பிக்பாஸ் சுசி? அவரே அளித்த பதில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இந்த சீசன் முடிவடைவதை எண்ணி ரசிகர்கள் மட்டுமின்றி ’குக்’களும், கோமாளிகளும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் அடுத்த சீசன் அனேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்போதே ’குக் வித் கோமாளி சீசன் 3இல் கலந்து கொள்பவர்கள் யார் யாராக இருக்கும் என்பது குறித்த அனுமானங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பாடகி சுசித்ராவிடம் ரசிகர் ஒருவர் ’நீங்கள் குக் வித் கோமாளி சீசன் 3க்கு சொல்லுங்கள், உங்களை விடுவதாக இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளித்த அளித்த சுசி, ‘அதுதான் என் மீது உங்களுக்கு இருக்கும் ஆசை, என்றால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். சுசியின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனையே சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார் என்பதும், அதனால் விஜய் டிவி அவரை குக் வித் கோமாளி’ அடுத்த சீசனுக்கு சுசியை அழைக்குமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.