அஜித்திடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்! மனம் திறந்த பிரபல பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
எந்தவித திரையுலக பின்புலமும் இல்லாமல் சுயமாக திரையுலகில் வெற்றி பெற்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் எந்த ஒரு நடிகருக்கும் ஒரு அறிமுக ஆரம்பம் இருக்கும் அல்லவா, அந்த வகையில் அஜித்தை முதன்முதலில் ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்தது பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள். இந்த தகவலை தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய மகன் எஸ்பிபி சரணும் அஜித்தும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்றும், அஜித் விளம்பர படத்திற்கு நடிக்க செல்லும்போது செண்டிமெண்ட்டாக சரணின் சட்டை மற்றும் ஷூவை அணிந்து செல்வார் என்றும் எஸ்பிபி கூறினார்
மேலும் அஜித்திடம் தனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்னவெனில் அவர் எந்த பத்திரிகைக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டி தரமாட்டார் என்றும் தேவையின்றி எந்த விஷயத்தையும் பேசமாட்டார் என்றும், எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் அவர் இல்லை என்றும் நடிப்பு மற்றும் குடும்பம் இவை இரண்டில் மட்டுமே அவரது கவனம் உள்ளது என்றும் எஸ்பிபி தெரிவித்தார்.
Exclusive !
— Thala Ajith™️ | ABD ?? (@Dinu_Akshiii) March 9, 2019
அஜித் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எந்த interview ம் கொடுக்க மாட்டாரு, டிவில அனாவசியமா பேசுறதோ கிடையாது.
FILM n FAMILY தான் :)
From the mouth of a Veteran SPB Sir ??#Viswasam #NerkondaPaaravai pic.twitter.com/sBZut6YubH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com