அஜித்திடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்! மனம் திறந்த பிரபல பாடகர்

  • IndiaGlitz, [Sunday,March 10 2019]

எந்தவித திரையுலக பின்புலமும் இல்லாமல் சுயமாக திரையுலகில் வெற்றி பெற்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் எந்த ஒரு நடிகருக்கும் ஒரு அறிமுக ஆரம்பம் இருக்கும் அல்லவா, அந்த வகையில் அஜித்தை முதன்முதலில் ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்தது பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள். இந்த தகவலை தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் எஸ்பிபி கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய மகன் எஸ்பிபி சரணும் அஜித்தும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்றும், அஜித் விளம்பர படத்திற்கு நடிக்க செல்லும்போது செண்டிமெண்ட்டாக சரணின் சட்டை மற்றும் ஷூவை அணிந்து செல்வார் என்றும் எஸ்பிபி கூறினார்

மேலும் அஜித்திடம் தனக்கு ரொம்ப பிடித்த விஷயம் என்னவெனில் அவர் எந்த பத்திரிகைக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டி தரமாட்டார் என்றும் தேவையின்றி எந்த விஷயத்தையும் பேசமாட்டார் என்றும், எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் அவர் இல்லை என்றும் நடிப்பு மற்றும் குடும்பம் இவை இரண்டில் மட்டுமே அவரது கவனம் உள்ளது என்றும் எஸ்பிபி தெரிவித்தார்.
 

More News

கோவை சரளா, மனோவை அடுத்து அரசியலில் நுழைந்த திரை நட்சத்திரம்

தேர்தல் சீசனில் கோலிவுட் திரையுலகினர் அரசியலில் நுழைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

பார்த்திபனின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட விஜய்சேதுபதி

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர், இயக்குனர் பார்த்திபன் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கிய பின்னர் மூன்று வருடங்கள் கழித்து தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை நாளை திருமணம் செய்யவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது

தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் பட்டியலில் இணைந்த பிரபுதேவா படம்

தமிழ்ப்புத்தாண்டு தின விடுமுறை நாளில் ஒருசில படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் 'தேவி 2' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகரின் படத்திற்காக பாடல் பாடிய சித்தார்த்

விஜய், தனுஷ், சிம்பு உள்பட தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது தெரிந்ததே. அந்த வகையில் தன்னுடைய படங்களில் மட்டுமின்றி