எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நல்ல முறையில் தேறி வந்தாலும் திடீரென அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தினந்தோறும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர், எக்போ கருவி உதவியுடன் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சரத்குமார் குடும்பத்தில் இன்னொரு வெறித்தனமான விஜய் ரசிகரா? வைரலாகும் வீடியோ

தளபதி விஜய்க்கு பொதுமக்கள் தரப்பில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

உலகமே அரண்டு கிடக்கும்போது உள்ளூரில் குத்தாட்டம்போடும் சீனா!!!

உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது.

மனைவி கறுப்பா இருக்கா… அதனால கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரக் கணவன்!!!

ஆந்திரமாநிலம் அனந்தபூர் அடுத்த குண்டக்கல் பகுதியை சார்ந்த யோகி என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அருணா என்ற பெண்மணியோடு திருமணம் நடந்திருக்கிறது

ஆகஸ்போஃர்ட் கொரோனா தடுப்பூசி- இந்தியர்களுக்கு முதலில் கிடைக்க வாய்ப்பு!!! பரபரப்பு தகவல்!!!

இங்கிலாந்தின் அஸ்ட்ரோஜெனெகா மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போஃர்ட் பல்கலைக் கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோஷீல்ட் தற்போது இங்கிலாந்து,

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்!!! அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர்மேலாண்மை திட்டங்களைக் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்துடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.