குடும்பத்துடன் ஹோலி கொண்டாடும் ஸ்ரேயா கோஷல்.. செம டான்ஸ் ஆடும் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,March 08 2023]

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஏராளமான திரைப்பட பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் என்பது தெரிந்ததே. கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கோஷல் ஐந்து ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021ஆம் ஆண்டு கர்ப்பம் ஆனார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்ரேயா கோஷல் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது கணவர், குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு செம டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

மேலும் இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.