புஷ்பவனம் குப்புசாமியின் மகள்களா இவர்கள்? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,December 12 2022]

நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி தொலைக்காட்சிகளில் பாடியதோடு பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர் தனது மனைவி அனிதா உடன் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 3000 இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவிஸ்ரீபிரசாத், ஜிவி பிரகாஷ் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களில் படங்களில் பாடியுள்ளார் என்பதும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பதும் அதில் மூத்தமகள் பல்லவி மருத்துவம் படித்த டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்பதும் இந்த திருமணத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் இரண்டு மகள்களுடன் கூடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பல்லவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

More News

ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகும் “பாபா பிளாக் ஷீப்”: பூஜை புகைப்படங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “பாபா பிளாக் ஷீப்" படத்தின் படப்படிப்பு இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

'தளபதி 67' படத்திற்கு முன்பே 2 படங்களில் கமிட் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' என்ற திரைப்படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது பார்த்து வருகிறார்

நயன்தாரா பாணியில் அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

 விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமி ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடியுள்ள நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து . 

'வந்துவிட்டார் முத்துவேல் பாண்டியன்.. 'ஜெயிலர்' படத்தின் வீடியோ

ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 'ஜெயிலர்' படைப்பின் கிளிப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

அப்பா பிறந்த நாளில் மகள் கொடுத்த சர்ப்ரைஸ்: 'லால் சலாம்' சூப்பர் போஸ்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ