மனித நேயத்துடன் சமூக சேவை செய்யும் சூப்பர் சிங்கர் பிரியங்கா: ரசிகர்கள் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் பட்டம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் அவர் ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் என்பதும் அவர் பாடிய பல பாடல்கள் யூடியூப் சேனலில் பிரபலமாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக அவர் பாடிய ‘சின்னச்சின்ன வண்ணக்குயில்’ பாடல், எஸ்பிபி அவர்களுடன் பாடிய பாடலுக்கு மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பாடகி பிரியங்கா மிகச் சிறந்த பாடகி மட்டுமின்றி ஒரு டாக்டர் என்பது பலரும் அறியாத உண்மையாக உள்ளது. குறிப்பாக அவர் ஒரு பல் டாக்டர் என்பதும், ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன

பிரியங்கா ஏழை எளியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல் பரிசோதனை செய்யும் காட்சிகள் அந்த புகைப்படத்தில் இருக்கின்றன. சூப்பர் சிங்கராக மட்டுமின்றி பல் டாக்டர் என்ற இன்னொரு அவதாரமாக ஏழை எளியவர்களுக்கு சமூக சேவை செய்து வரும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More News

'பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மேலும் ஒரு 'குக் வித் கோமாளி'?

கடந்த நான்கு மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இதனை அடுத்து ஐந்தாவது சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 

முதல்வர் வேட்பாளர்கள்- பலம் யாருக்கு? விளக்கும் அரசியல் வீடியோ!

பெரும் தலைவர்கள் யாரும் இல்லாது தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

விஜய் படத்தில் அறிமுகம், அஜித் படத்தில் விருது: டி.இமான் பெருமிதம்

தளபதி விஜய் படத்தில் அறிமுகமாகி தல அஜித் படத்தில் விருது கிடைத்துள்ளது தனது பெருமையான ஒன்று என்று டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 

பிக்பாஸ் ஆரியின் மாஸ் அறிவிப்பு: ஆர்மியினர் உற்சாகம்!

கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றியாளர் ஆரி என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில்

நாயகியாகிறார் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'துப்பாக்கி'. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது