டீச்சராக மாறிய 'மகளிர் மட்டும்' பட பாடகி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மகளிர் மட்டும்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியவர் பாடகி நமீதா என்பது பலருக்கு தெரிந்திருக்கும். இவர் பாடிய 'கருகருன்னு சுருட்டமுடி வளர்திருந்தாண்டி' மற்றும் 'கேரட்டு பொட்டழகன்' ஆகிய இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது
இந்த நிலையில் பாடகி நமீதா பாபு தற்போது இசைப்பள்ளி ஒன்று ஆரம்பித்து இசை டீச்சராகியுள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதி மக்கள் பலர் இசைப்பள்ளி ஆரம்பிக்கும்படி நமீதாவை கேட்டுக்கொண்டதாகவும், அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க இந்த இசைப்பள்ளியை ஆரம்பித்துள்ளதாகவும் நமீதா கூறியுள்ளார். ஆசிரியை பணி தனக்கு முழு திருப்தி அளிப்பதாகவும், தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் திருப்தி வேறு எந்த தொழிலும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை கல்லூரி ஒன்றில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் நமீதா, கல்லூரி வாழ்க்கை, பாடல் ரெக்கார்டிங், இசை ஆசிரியை என நாள் முழுவதும் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com