டீச்சராக மாறிய 'மகளிர் மட்டும்' பட பாடகி

  • IndiaGlitz, [Thursday,September 28 2017]

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மகளிர் மட்டும்' படத்தில் இரண்டு பாடல்களை பாடியவர் பாடகி நமீதா என்பது பலருக்கு தெரிந்திருக்கும். இவர் பாடிய 'கருகருன்னு சுருட்டமுடி வளர்திருந்தாண்டி' மற்றும் 'கேரட்டு பொட்டழகன்' ஆகிய இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது

இந்த நிலையில் பாடகி நமீதா பாபு தற்போது இசைப்பள்ளி ஒன்று ஆரம்பித்து இசை டீச்சராகியுள்ளார். சென்னை அண்ணாநகர் பகுதி மக்கள் பலர் இசைப்பள்ளி ஆரம்பிக்கும்படி நமீதாவை கேட்டுக்கொண்டதாகவும், அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க இந்த இசைப்பள்ளியை ஆரம்பித்துள்ளதாகவும் நமீதா கூறியுள்ளார். ஆசிரியை பணி தனக்கு முழு திருப்தி அளிப்பதாகவும், தனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் திருப்தி வேறு எந்த தொழிலும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை கல்லூரி ஒன்றில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் நமீதா, கல்லூரி வாழ்க்கை, பாடல் ரெக்கார்டிங், இசை ஆசிரியை என நாள் முழுவதும் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஓவியாவின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள்

பிக்பாஸ் புகழ் ஓவியாவின் அடுத்த படம் இயக்குனர் டிகே இயக்கவுள்ள 'காட்டேரி' என்ற படம் என்பதையும் சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

விஜய்சேதுபதியை முந்திய அதர்வா

இயக்குனர் சீனுராமசாமியின் 'தர்மதுரை' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படத்திலும் விஜய்சேதுபதியே நடிப்பார் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியானது

சர்வதேச பிரபலத்தை கவர்ந்த கமல்ஹாசனின் கருத்து

கமல்ஹாசன் அரசியலில் இறங்க போவதாக அறிவிப்பு செய்ததும் முதலில் தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்தனர். தமிழகத்தை தாண்டி கேரள முதல்வர் மற்றும் டெல்லி முதல்வரை சந்தித்தார்

ஒருகோடி ரூபாய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா தரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதும், ரூ.50 லட்சம் பரிசை தட்டி செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பதையும் தெரிய் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

சிதைந்து போன முகம்! சிதையாத காதல்: உண்மைக்காதலுக்கு ஒரு உதாரணம்

திரைப்படங்களில் தொலைபேசியில் காதல், கடிதத்தில் காதல் என முகம் பார்க்காத பல காதல்கள் உண்டு. ஆனால் உண்மைக்காதலில் பெரும்பாலும் அழகு, பின்னணி சிலசமயம் சாதி, மதம் பார்த்த காதல் தான் உண்டு.