கோவிலில் கிடைத்த தரிசனம்: இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பிரபல பாடகி

இசைஞானி இளையராஜாவை சந்தித்தது குறித்து பிரபல பாடகி கூறியபோது கோவிலில் சென்று தரிசனம் கிடைத்த உணர்வுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா அவர்களை சமீபத்தில் பிரபல பாடகி ஸ்வேதா மோகன் தனது மகளுடன் சென்று பார்த்தார். இந்த சந்திப்பு இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்தது.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் இசைஞானி இளையராஜா அவர்களை சந்திப்பதாகவும் இந்த சந்திப்பு எனக்கு கோவிலில் சுவாமி தரிசனம் கிடைத்தது போல் இருந்ததாகவும், இசைஞானியை பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஸ்வேதா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இளையராஜாவுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த பல பாடல்களை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார் என்பதும் அதில் ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.