தனுஷ் படத்தில் பாடல் பாடிய தந்தை நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

தனுஷ் நடித்த படத்தில் தந்தையாக நடித்த நடிகர் ஒருவர் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கர்ணன்’. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்தவர் மாணிக்கவிநாயகம். இவர் ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் நடித்துவரும் ’கர்ணன்’ திரைப்படத்திற்காக இவர் ஒரு பாடலை பாடியுள்ளார்

இந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாக அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தனுசுக்கு தந்தையாக நடித்த ஒருவரே தனுஷ் படத்தில் பாடல் பாடி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தனுஷ் ஜோடியாக ராஜிஷா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் லால், நட்டி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் சமூக கருத்துடன் கூடிய இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது