'ரஞ்சிதமே' பாடல் மட்டுமல்ல.. 'வாரிசு' படத்தில் இதையும் செய்துள்ளார் மானஸி!

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் நேற்று முன்தினம் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. அது மட்டும் இன்றி குடும்பங்கள் கொண்டாடும் படம் என்ற வகையில் தாய்மார்களை இந்த படம் வெகுவாக கவர்ந்து உள்ளது என்பது இந்த படத்தின் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஹைலைட்டான ரஞ்சிதமே என்ற பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் படத்தில் இந்த பாடல் விஜய் மற்றும் ராஷ்மிகாவின் செம டான்ஸ் காரணமாக ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

இந்த பாடலை விஜய் மற்றும் மானஸி பாடியிருந்த நிலையில் பாடகி மானஸி தனது சமூக வலைதளத்தில் ரஞ்சிதமே பாடலை மட்டும் தான் பாடவில்லை என்றும் ‘வாரிசு’ தெலுங்கு பதிப்பிற்கு ராஷ்மிகா மந்தனாவுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல திரைப்படங்களுக்கு மானஸி பின்னனி குரல் கொடுத்துள்ளார் என்பதும், குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான தனுஷின் ‘மாறன்’ திரைப்படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு பின்னணி குரல் கொடுத்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வாரிசு' படத்தை பாராட்டிவிட்டு அதன்பின் மன்னிப்பு கேட்ட பெண்ணின் வீடியோ: இயக்குனர் கண்டனம்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தை பாராட்டி விட்டு அதன் பின்னர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த 90களின் பிரபல ஹீரோ!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 90களின் பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 நிமிட காட்சியை எடிட் செய்ய 25 நாள் ஆனது: 'துணிவு' எடிட்டர் தகவல்

'துணிவு' திரைப்படத்தில் இடம் பெற்ற ஐந்து நிமிட காட்சியை எடிட் செய்வதற்கு 25 நாட்கள் தனக்கு ஆனது என படத்தின் எடிட்டர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

'லத்தி' உள்பட பொங்கல் விருந்தாக வரும் 3 ஓடிடி படங்கள்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மைனாவிடம் காதலை வெளிப்படுத்திய ஜிபி முத்து.. விக்ரமன் அடித்த செம கமெண்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி 96 வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்