பாடகி மகதிக்கு இவ்வளவு பெரிய மகனா? சங்கீதம் சொல்லி கொடுக்கும் அழகே தனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் மகதி என்பதும் இவரது பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவர் தனது மகனுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் மகதிக்கு இவ்வளவு பெரிய மகனா? என்ற ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சாமி’ என்ற திரைப்படத்தில் ’புடிச்சிருக்கு’ என்ற பாடலை பாடியதன் மூலம் பாடகியாக மகதி அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக ’என்னை அறிந்தால்’ படத்தில் இவர் பாடிய ’உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு டாக்டர் ஸ்ரீ குமார் என்பவரை பாடகி மகதி திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பாடகி மகதி அவ்வப்போது தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தனது மகனுக்கு சங்கீதம் சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் மகதிக்கு இவ்வளவு பெரிய மகனா? என்றும், மகதி தனது மகனுக்கு சங்கீதம் சொல்லி கொடுக்கும் அழகே தனி என்பது போன்ற கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் கட்சிகளை பதிவு செய்துவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments