பிரபல பாடகிக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்: சைபர் க்ரைமில் புகார்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுப்பிரியாவுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் தொல்லை கொடுத்ததை அடுத்து மர்ம நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாடகி மதுப்பிரியா. ஆனால் இவர் முதல் நபராக 13 நாட்களில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுப்ப்ரியாவுக்கு சமூக வலைத்தளங்களில் தொல்லை தரும் மெசேஜ்கள் அடிக்கடி வந்து உள்ளன. மேலும் அவரது போனுக்கு மர்ம நபர்கள் சிலர் போன் செய்து தொல்லை செய்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி மதுப்ப்ரியா தூரங்கா, பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்‌ஷியம் மற்றும் சரிலேறு நீகவரு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் பாடல்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.