'ஆண்பாவம்' படத்தில் நடித்த பிரபல கிராமிய பாடகி விபத்தில் படுகாயம்!

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

நடிகர் பாண்டியராஜன் இயக்கி நடித்த முதல் திரைப்படம் ’ஆண்பாவம்’, இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக பிரபல கிராமிய பாடகி கொல்லாங்குடி கருப்பாயி என்பவர் நடித்திருந்தார். இவர் அந்த படத்தில் பல கிராமிய பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ஆண்பாவம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பாண்டியராஜன் படங்கள் உள்பட வேறு சில படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று பாடகி கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் காளையார்கோவிலில் கடைக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த பகுதியில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்

இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கொல்லாங்குடி கருப்பாயி அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்தபோது அவருடைய கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் காலில் பிளேட் வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் வயது முதிர்வு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து மாவு கட்டு மட்டும் போடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்து கொல்லங்குடி கருப்பாயி உறவினர் ஒருவர் கூறும் போது தனது பாட்டியின் கால் சரியாக இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், இதுவரை அவர் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சம்பாதித்த பணத்தை வைத்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசைப்பட்டதாகவும் வீடு கட்டத் தொடங்கும் நேரத்தில் இப்படி எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது பணம் இல்லாமல் அவர் தவிப்பதாகவும் நடிகர் சங்கம் மற்றும் பெரிய நடிகர்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

More News

இயக்குனர் ஹரியின் கருத்துக்கு மாற்று கருத்து கூறிய இயக்குனர்

சாத்தான்குளம் பகுதியில் நடந்த தந்தை மகன் வியாபாரிகள் காவல்துறையினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் மரணம் அடைந்ததாகவும் வெளியான செய்தி

திருமண ஷூட்டிங் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்: பீட்டர்பால் மனைவி ஆவேசம்

பீட்டர் பால், வனிதா திருமணம் நேற்றுமுன்தினம் மாலை நடந்த நிலையில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் பால் முதல் மனைவி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

டார்ச்சர் தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு டேக் செய்து டுவிட் செய்த பிக்பாஸ் டேனியல்

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் டேனியல் போப் என்பதும் அவர் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

ஒரு கோடி ரூபாய் கேட்கிறாரா பீட்டர்பால் முதல் மனைவி: வனிதா அதிர்ச்சி தகவல்

நடிகை வனிதா நேற்று மாலை சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பால் அவர்களை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

பின்னணி பாடகி ஜானகி வதந்தி குறித்து மகன் விளக்கம் 

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ் ஜானகி அவர்கள் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் வதந்திக்கு அவரது மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.