பாடகர் கேகே பாடிய கடைசி தமிழ்ப்பாடல்: 'தி லெஜண்ட்' இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகர் கேகே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக தமிழில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ’தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தில் கேகே ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை அந்த படத்தின் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் தான் அவர் பாடிய கடைசி தமிழ்ப்பாடல் ஆகும்.
மேலும் பாடகர் கேகே இந்த பாடலை பாடும் போது எடுத்த வீடியோவையும் ஜேடி ஜெர்ரி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாடல் குறித்து இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி கூறியிருப்பதாவது:
கேகே எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு. அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம். என்ன ஒரு உற்சாகம், ஆர்வம், commitment .. எத்தனை முறை பாடினாலும் energy குறையாத குரல்.. பழகுவதற்கு இனிமை ,பாடலில் தனித்துவம். சந்தித்த சில மணிநேரத்திலேயே ரொம்ப நாள் பழகிய உணர்வைத் தர ஒரு சிலரால்தான் முடியும்.
எங்களுக்குப் பாட வந்திருந்தாலும் எங்களை ஒரு guest போல கவனித்தது ரொம்ப அபூர்வமான குணம். காலத்திற்கும் காதில் வாசம் செய்யும் பாடலை பாடிய அந்த கலைஞன் இப்போது இல்லை என்பதை நம்ப மறுக்கிறது மனம். வாழ்வின் நிலையாமைச் சொல்லி செல்லும் நாட்கள் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறோம்
kk எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு.
— dir_jdjeryofficial (@jdjeryofficial) June 1, 2022
அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம். pic.twitter.com/ibiXvsFnZR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments