உண்மையில் என்ன நடந்தது? கொரோனா பாதிப்பில் இருந்து குணமான பாடகி கனிகா கபூர்

மும்பையை சேர்ந்த பிரபல பாடகி கனிகா கபூர், இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தப்பிவிட்டதாகவும், இதனையடுத்து அவர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு கொரோனாவை பரப்பியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள பாடகி கனிகாகபூர், உண்மையில் என்ன நடந்தது என்பதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்தபோதும் மும்பை திரும்பிய பின்னரும் தன்னுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருப்பதாகவும், தான் மார்ச் 10ம் தேதியே மும்பைக்கு வந்துவிட்டதாகவும், மார்ச் 18ம் தேதிதான் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் மார்ச் 10ம் தேதி மும்பை வந்த தான், தனது சொந்த ஊரான லக்னோவிற்கு மார்ச் 11ம் தேதி சென்று பெற்றோர்களை சந்தித்ததாகவும், அப்போது உள்நாட்டு விமான நிலையங்களில் கொரோனா சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும், லக்னோவில் இருந்த மூன்று நாட்களிலும் தான் எந்தவொரு நிகழ்ச்சியையும் தான் நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்தவுடன் கடந்த மார்ச் 19ம் தேதி தனக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாகவும், அதில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததை அடுத்து மார்ச் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றதாகவும், அதன்பின் தனக்கு மூன்று முறை நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் என்னை பற்றி வெளியான கதைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்றும், உண்மையை ரசிகர்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் தன்னை கனிவுடன் பார்த்துக் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர்கள் நன்றி என்றும் கனிகா கபூர் கூறியுள்ளார்.

View this post on Instagram

Stay Home Stay Safe ????

A post shared by Kanika Kapoor (@kanik4kapoor) on Apr 26, 2020 at 1:50am PDT