கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய பிரபல பாடகி

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி, வீட்டிற்கு சென்றதாகவும் அதன் பின்னர் அவர் ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகவும் அந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கனிகா கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால் அவர் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிகா கபூருக்கு அடுத்தடுத்து நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு முறையும் பாசிட்டிவ் என ரிசல்ட்டுகள் வந்தன.

ஆனால் நேற்று ஐந்தாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இருப்பினும் இரண்டு முறை பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று ஆறாவது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மீண்டும் நெகட்டிவ் வந்ததால் கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

More News

விலங்குகளுக்கு கொரோனா வைரஸ்!!! இதுவரை சொல்லப்பட்ட ஆய்வு முடிவுகள்???

அமெரிக்காவின் நியூயார்கள் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

'திருட்டுப்பயலே' இயக்குனரின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்!

'திருட்டுப் பயலே' மற்றும் 'திருட்டுப் பயலே 2' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன் தற்போது 'திருட்டுப்பயலே 2' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்

கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே.