உலகப்புகழ் பெற்ற பாடகருக்கு பக்கவாதம்… ரசிகர்களைப் பதற வைக்கும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் ஃபைபர் தனக்கு முகப் பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தத் தகவல் உலகம் முழுவதுமுள்ள அவருடைய ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப் உலகில் முன்னணி பாடகராக வலம்வரும் ஜஸ்டின் ஃபைபர் சிறிய வயதிலேயே கிராமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய குரலுக்காகவும் இசைக்காகவும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஜஸ்டின் தனக்கு முகப் பக்கவாதநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனால் ஒருபக்க கண் இமையை சிமிட்ட முடியவில்லை என்றும் தன்னால் சிரிக்க முடியவில்லை என்றும் ஜஸ்டின் வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தன்னுடைய இசைப் பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ள அவர் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜஸ்டின் ஃபைபருக்கு ஏற்பட்டுள்ள பக்கவாத நோய் ராம்சேய் ஹண்ட் சின்ட்ரோம் என்றும் இது மிகவும் அரிதானது என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன. இந்தத் தகவல் உலகம் முழுக்கவுள்ள அவருடைய ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments