பாஜகவில் இணைந்த 'பாகுபலி' பட கலைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே திரையுலகை சேர்ந்த பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஒருசிலர் தேர்தலில் போட்டியிட்டும் வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னிதியோல், பாஜகவில் இணைந்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல பாப் இசை பாடகரும் பல பாலிவுட் படங்களில் பாடல்கள் பாடியவருமான டேலர் மெஹந்தி என்பவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் இடம்பெற்ற 'பலே பலே பலே பாகுபலி, பயமின்றி பாயும் புலி' என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் டேலர் மெஹந்தி, மத்திய அமைச்சர் விஜய் கோயல் மற்றும் வடமேற்கு டெல்லி பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் இவர் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வார் என்றும் தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments