பாஜகவில் இணைந்த 'பாகுபலி' பட கலைஞர்

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள ஏழு கட்ட தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே திரையுலகை சேர்ந்த பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஒருசிலர் தேர்தலில் போட்டியிட்டும் வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னிதியோல், பாஜகவில் இணைந்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல பாப் இசை பாடகரும் பல பாலிவுட் படங்களில் பாடல்கள் பாடியவருமான டேலர் மெஹந்தி என்பவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் இடம்பெற்ற 'பலே பலே பலே பாகுபலி, பயமின்றி பாயும் புலி' என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் டேலர் மெஹந்தி, மத்திய அமைச்சர் விஜய் கோயல் மற்றும் வடமேற்கு டெல்லி பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் இவர் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வார் என்றும் தெரிகிறது.

More News

காதலனை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம்

இதை தமிழ்ப்படத்திற்கும் செய்யலாமே? தியேட்டர் அதிபரிடம் கேள்வி எழுப்பிய விஷால்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறையில் வெளியாகும் சமந்தாவின் அடுத்த படம்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வெற்றிப்படமாகவும் அமைந்தது.

எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

பத்து ரூபாய்க்கு 8 மணி நேரம் போதை! விளைவு தெரியாமல் பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிப்பது எப்படி?

இந்த போதை பழக்கம் வடமாநில இளைஞர்களிடம் இருந்து, தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது...