முதல்முறையாக இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா

  • IndiaGlitz, [Monday,January 15 2018]

பிரபல பின்னணி பாடகி சித்ரா முதல்முறையாக இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ததோடு, மகரவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டார்

சமீபத்தில் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்பட்ட ஹரிவராசனம் விருதினை பெற்ற பாடகி சித்ரா, ஐயப்பனை நேரில் தரிசனம் செய்ய முடிவு செய்து விரதம் இருந்தார். பின்னர் இருமுடி கட்டி நேற்றைய மகரஜோதி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருவராக ஜோதியை தரிசனம் செய்தார்.

பாடகி சித்ராவுக்கு தேவசம் போர்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதேபோல் பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் இருமுடி கட்டி ஐயப்பன தரிசனம் செய்தார்.