ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய பாடகி சித்ராவின் பிரார்த்தனை வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசிய விருதுகள் பெற்ற பிரபல பின்னணி பாடகி சித்ரா இன்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த ஒரு பிறந்த நாள் வாழ்த்து ரசிகர்களை கண்ணீர் குளத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாடகி சித்ரா அவர்களுக்கு திருமணமாகி 15 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை நந்தனா. கடந்த 2011ஆம் ஆண்டு சித்ரா இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் சென்றிருந்தபோது அங்கு தங்கியிருந்த இடத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து நந்தனா மரணம் அடைந்தார். மகளின் மரணம் சித்ராவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்ததால் அவர் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது செல்ல மகள் நந்தனாவின் பிறந்த நாளை அடுத்து சித்ரா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தனா! நீங்கள் எங்கள் வாழ்வில் ஒரு பொக்கிஷம் சொர்க்கத்தில் இருக்கும் எங்கள் தேவதை எங்களுடைய வாழ்வை இனிமையாக மாற்றி வருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடகி சித்ராவின் இந்த நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com