ஒரு பாடலாசிரியருக்கு ஆதரவா இத்தனை பேர் ஏன் பொங்குறாங்க? சின்மயி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருபக்கம் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து குறித்து தான் எழுப்பிய புகாருக்கு யாரும் செவிசாய்க்கவில்லையே என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருகிறார். சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நீண்ட குற்றச்சாட்டுகள் இதுதான்:
லீகலா போங்கன்னு கருத்து தெரிக்க விட்டுட்டு இருக்குற மக்களுகக்கு NCW-ல கேஸ் பதிவு பண்ணி, அவங்க 3 ரிமைண்டர்ஸ் குடுத்து, ஒரு லேடி ஆபீசர் வீட்டுக்கு வந்து, எங்கிட்டயும், என் தாயார், என் கணவர், மூன்று பேர் கிட்டயும் கையழுத்துல கம்ப்ளைன்ட வாங்கிட்டு போயாச்சு. மேடை மேடையா ஏறி திரு ராதா ரவி அவர்கள் என்ன அவமானப்படுத்துனதும் அவசர அவசரமா விசாரணை பண்ணாம என்ன தடை பண்ணது, எதனாலன்னு எல்லாருக்கும் தெரியும்
இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் குடுத்துருக்காங்க. கிருபா என்பவர் பல பெண்கள் கிடட பேசி இந்த ரிப்போர்ட் பதிவு பண்ணாங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? ரைஹானா மேடம் அவர் அப்டித்தான்னு பேட்டி குடுப்பாங்க. மாலினி யுகேந்திரன் 'என் கண்ணு முன்னாடி நடந்தது’ன்னு சொல்லிருக்காங்க. புவனா சேஷன் - அவருக்கு ஒத்துழைக்கலன்னு அவங்க கேரியர் நாசம் பண்ணி விடடார்னு பேட்டி குடுத்துருக்காங்க அமெரிக்காவில் இருந்து சிந்து ராஜாராம் மீடியாவில் பேட்டி குடுத்தாங்க
அவர் நடத்துற ஹாஸ்டல்ல பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய் சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ? "அறியப்படடவர்கள் மீது பழி சுமத்துவது வழக்கமாகிவிடாது"ன்னும், "ஆதாரங்களை வெச்ச்சுருக்கேன்"னு சொன்னவர், இத்தனை நாள்ள என் மேல கேஸ் போட்டுருக்கலாமே? அதெல்லாம் பண்ணுனா அவர் மன்னிப்பு குடுக்கறேன், என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன போன்கால் எக்ஸ்போஸ் ஆகுமே
என்ன மட்டும் குறி வைத்து, என் வழக்கை விசாரிக்க பண்ணாம, என்ன மட்டும் வேலை செய்ய விடாம தடை பண்ணுனது அயோக்கியத்தனம். அத நான் கேள்வி கேக்க கூடாதுன்னு சொல்றதும் அயோக்கியத்தனம் தான். இத்தனை நாள்ல ஒரு ஐசிசி செட் பண்ணிருக்கலாமே? தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திருக்கலாமே? ஏன் பண்ணல? நான் என் குற்றக்காட்டுகளை முன்வைத்தப்போ பார்ப்பனர்களின் சதி, மோடியின் சதி, ரபேல் ஊழலிருந்து திசை திருப்ப பண்ண சதி, பப்ளிசிட்டி ஸ்டண்ட்ன்னு, முற்போக்கு, பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு பேசுனாங்க.
நக்கீரன் இதழ்ல்ல பாஜக எனக்கு பெங்களூர்ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. தெரியாமத்தான் கேக்குறேன். இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? அவரோட அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துறது, மெரட்டுறது உண்மைதான். இது பல ஆண்டுகளா ஓப்பனா நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் யாரு மூடி மறைத்தாலும், இல்லவே இல்லைன்னு பொய் சொன்னாலும். நான் கேள்வி கேட்டுகிட்டே தான் இருப்பேன்.
இவ்வாறு சின்மயி பதிவு செய்துள்ளார்.
மேடை மேடையா ஏறி திரு ராதா ரவி அவர்கள் என்ன அவமானப்படுத்துனதும் அவசர அவசரமா விசாரணை பண்ணாம என்ன Ban பண்ணது, எதனாலன்னு எல்லாருக்கும் தெரியும். 2/
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் குடுத்துருக்காங்க. @krupage பல பெண்கள் கிடட பேசி இந்த report பதிவு பண்ணாங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? https://t.co/TPkmc4AV3z 4/
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
அவர் நடத்துற hostelல பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய் சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ? 6/
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
என்ன மட்டும் குறி வைத்து, என் case investigate பண்ணாம, என்ன மட்டும் வேலை செய்ய விடாம ban பண்ணுனது அயோக்கியத்தனம். அத நான் கேள்வி கேக்க கூடாதுன்னு சொல்றதும் அயோக்கியத்தனம் தான்.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
இத்தனை நாள்ல ஒரு ICC set பண்ணிருக்கலாமே? Independent investigation நடத்திருக்கலாமே?
ஏன் பண்ணல? 8/
நக்கீரன் magazineல, பாஜக எனக்கு Bangalore-ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
தெரியாமத்தான் கேக்குறேன்.
இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க? 10/
MeToo புகார்களை investigate பண்ண ஒரு தனி GoM, திரு ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமைல ஆரம்பிக்கறதா சொன்னாங்க. எதுவுமே நடக்கல. https://t.co/eGqKTwfRut
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
தமிழ்நாட்டுல பண்ணலாமே?
Film Industry ICC எப்ப set பண்ணுவாங்க?
என்னோட Case Investigate பண்ணுங்கன்னு நான் கேட்டுட்டு தான் இருக்கேன்.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 26, 2021
ஆனா, யார் பெயரை use பண்ணி பெண்களை மெரட்டுறாரோ, அவங்களே எதுவுமே நடக்காத மாதிரி, இவரை மேடை ஏற்றி மகுடம் சூட்டி, பெரிய்ய யோகியர் மாதிரி scene போடறதெல்லாம் ஒரு பாலியல் குற்றவாளிய encourage பண்ணுற மாதிரி தான். End.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments