போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. வட இந்திய பிரபலங்களும் இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களில் ஒருவர் பாடகி சின்மயி என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலா கொலைக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பதும், அதற்கான ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ஒரு நெட்டிசன் ’உங்களைப்போல தைரியசாலிகள் உருவாக வேண்டும்’ என்று கூறியதற்கு ’உருவாகும் முன்னே கொன்னுறாங்களே’ என்று விரக்தியுடன் பதிலளித்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
#JusticeForSasikala
— Chinmayi Sripaada (@Chinmayi) July 3, 2020
Porum da saami. Edhukku ponna porakkurom nu thonudhu.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com