இதைப்பற்றி யாராவது விவாதம் செய்தார்களா? சின்மயி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகள் சிக்கியது குறித்தும், அதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்தும், இன்னும் சில நடிகைகளிடம் விசாரணை செய்து கொண்டிருப்பது குறித்தும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் நேற்று நடிகை குஷ்பு ’பெண்கள் மட்டுமே போதைப்பொருட்களை பயன்படுத்தியது போலவும் அவர்களிடம் மட்டுமே விசாரணை செய்து வருகின்றனர். ஆண்கள் யாருமே போதை பொருள் பயன்படுத்துவது இல்லையா? ஏன் அவர்களிடம் விசாரணை செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்
இந்த நிலையில் பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்து தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள போலீசார் 160 கிலோ கஞ்சாவை கைப்பற்றி ஒரு ஒரே ஒரு கிலோ மட்டும் கைப்பற்றியதாக வழக்குப்பதிவு செய்து மீதி உள்ள 159 கிலோ கஞ்சாவை விற்பனை செய்துள்ளதாக செய்தி ஒன்று முன்னணி நாளிதழில் வந்துள்ளது
இந்த செய்தியை சுட்டிக் காட்டிய பாடகி சின்மயி ’இதை பற்றி யாராவது விவாதம் செய்தார்களா? எந்த தொலைக்காட்சியாவது இதுகுறித்து விவாதம் செய்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கினால் மட்டும் அனைத்து ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் செய்கின்றன. ஆனால் காவல்துறையினர் அதே தவறை செய்தால் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்’ என்ற ரீதியில் சின்மயி பதிவு செய்துள்ள இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Who is discussing this on Prime Time TV? ?????????? pic.twitter.com/D3mrlNvbN7
— Chinmayi Sripaada (@Chinmayi) September 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments