லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி சொன்ன சின்மயி.. காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.
இந்த டிரைலர் வெளியாகி ஐந்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதும் இப்போது வரை இந்த டிரைலர் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் சரியான ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல பாடகி சின்மயி என்பது தெரியவந்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷாவுக்கு சின்மயி இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகியோர்களுக்கு நன்றி என்று சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இந்த பதிவை அடுத்து சின்மயி தொடர்ந்து த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
I am a million times grateful to Mr Lokesh Kanagaraj and Mr Lalit for having taken this stand.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 5, 2023
THAT. IS. MY. VOICE. IN. LEO. FOR. TRISHA.
And guess what? I have dubbed in Tamil, Telugu AND Kannada. #Badass https://t.co/x747eBCzU7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments