லோகேஷ் கனகராஜ்-க்கு நன்றி சொன்ன சின்மயி.. காரணம் என்ன?

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த டிரைலர் வெளியாகி ஐந்தே நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என்பதும் இப்போது வரை இந்த டிரைலர் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் சரியான ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல பாடகி சின்மயி என்பது தெரியவந்துள்ளது. இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷாவுக்கு சின்மயி இந்த படத்திற்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் ஆகியோர்களுக்கு நன்றி என்று சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இந்த பதிவை அடுத்து சின்மயி தொடர்ந்து த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More News

அதுக்கு மேல் உண்மைய சொல்லணும்னா, லியோ தான் உயிரோடு வந்து சொல்லணும்: 'லியோ' டிரைலர்..!

 தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

'கமல் 233' படத்தின் இசையமைப்பாளர் இவரா? 17  வருடங்களுக்கு பின் மீண்டும் மேஜிக்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233வது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

என் முன்னாடி கடவுள் வந்து நின்னா கூட என்னை நான் மாத்திக்க மாட்டேன்.. பிக்பாஸ் போட்டியாளர்..!

 கடவுள் வந்து என் முன்னால் நின்று, என்னை மாற்றிக்கொள்ள சொன்னால் கூட என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிக் பாஸ் போட்டியாளர் கூறிய புரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்சார் அதிகாரிகள் மீது விஷால் கூறிய புகார்.. சிபிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை..!

சென்சார் அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில் இந்த புகார் மீது சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இன்று 'லியோ' டிரைலர், நாளை 'அயலான்' டிசர்.. ஒரே யூடியூப் சேனலில் ரிலீஸ்..!

இன்று தளபதி விஜய்யின் 'லியோ' டிரைலர் வெளியாகும் அதே youtube சேனலில் தான் நாளை 'அயலான்' படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.