டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி திடீர் நீக்கம்: மீடூ விவகாரம் காரணமா?
- IndiaGlitz, [Sunday,November 18 2018]
கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் யூனியனுக்கு இரண்டு வருடங்களாக சந்தா கட்டவில்லை என்றும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்றும், இதன் காரணமாக சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்த சின்மயி, மீடூ விவகாரம் காரணமாகத்தான் தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவியால் நான் நீக்கப்பட்டுள்ளேன். யூனியனுக்கு நான் கட்ட வேண்டிய சந்தா ரூ.5 லட்சம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நான் சந்தா செலுத்தத் தேவையில்லை தனக்குக் கூறப்பட்டது அதனால்தான் நான் சந்தா கட்டவில்லை. மேலும் எனது சம்பளத்தில் இருந்து யூனியன் பிடித்த 10% பணத்துக்கு எந்த ஒரு ரசீதும் இதுவரை யூனியன் தரவில்லை என பதிவு செய்துள்ளார்.