மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? ஷிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் நபராக ஷிவானியின் அம்மா வந்தார் என்பதும், அவர் ஷிவானியை வறுத்தெடுத்தார் என்பது தெரிந்ததே.
ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் ஷிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு ஒரு சிலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோவில் தனது மகளை இவ்வாறு கண்டித்து அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது இல்லை, ஆனால் அந்தத் தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு ரொம்பவும் தவறாக தெரிகிறது.
4 பேர் அவதூறாக சொல்வதைக் கேட்டுக்கொண்டு பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துவதால் தான் அந்த மகள்கள் தவறான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும் காரணமாக உள்ளது. நீங்கள் ஒரு நல்ல பெற்றோர் எனில் தயவு செய்து உங்கள் மகளின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு ஒரு பொறுப்பான பெற்றோராக பேசுங்கள்.
ஹவுஸ்மேட் அனிதாவை பலரும் கிண்டல் செய்ததாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் அவருடைய தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு சமூக வலைதளத்தில் நடக்கும் கொடூரத்தை தவிர்த்து தன் கடைசி நாட்களில் எதை பார்த்தார் என்று ஆச்சரியப்படுகிறேன் என்று சின்மயி பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com