முதல்முறை உடலுறவில் தவறாக புரிந்து கொள்ளப்படும் விஷயங்கள்: சின்மயி வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலர் தவறான புரிந்துகொள்தலை வைத்திருக்கின்றனர் என்றும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி அவ்வப்போது பெண்ணியம் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பதும் அவர் போல்டாக தெரிவிக்கும் கருத்துக்கள் பரபரப்பு ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முதன்முறை உடலுறவு செய்யும் போது சில தவறான புரிந்துகொள்தல் இருக்கிறது என்றும் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணுடன் முதல் முறை உடலுறவு கொண்டபோது பெண்ணுக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டால் ஆண்கள் அதை கொண்டாடுவார்கள் என்றும் அந்த பெண் கன்னித்தன்மை உடையவர் என நினைத்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

முதல் முறை உடலுறவு கொண்ட பிறகு ரத்தப்போக்கு என்பது ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை மட்டும் குறிக்காது என்றும் வேறு பல விஷயங்களும் அதில் உள்ளது என்றும் இதுகுறித்து ஆண்கள், பெண்கள் என்ன இரு தரப்புமே சரியான பாலியல் கல்வியை நாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒருபோதும் ஆபாச படங்களிலிருந்து பாலியல் விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அது தவறான கருத்துக்களை கொண்டது என்றும் சரியான பாலியல் கல்வியை ஆண், பெண் இரு தரப்பினரும் திருமணத்திற்கு முன்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதைப் பற்றி பேசுவதற்கும் பெண்கள் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

தமிழில் நான் கண்டுபிடித்த 'பிகிலி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்: விஜய் ஆண்டனி விளக்கம்..!

விஜய் ஆண்டனி நடித்த இயக்கி உள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் 'பிகிலி' என்ற வார்த்தையை

தன்னை பைத்தியம் என கலாய்த்த இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்.. வீடியோ வைரல்..!

தன்னை பைத்தியம் என்று கலாய்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு தனது வாழ்த்துக்கள் என இயக்குனர் பார்த்திபன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் அப்டேட்.. செம போஸ்டர் ரிலீஸ்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது

'மீண்டும் சந்திப்போம்': சஞ்சய் தத்தை வழியனுப்பி வைத்த 'லியோ' படக்குழு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை

'நீங்கள் வெர்ஜினா'? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதிலடி..!

நடிகை ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் வெர்ஜினா? என கேள்வி கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.