பெண்களிடம் அத்துமீறினாரா தமிழ் நடிகர்.. பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகர் ஒருவர் பெண்களிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பாடகி சின்மயி கவியரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஜான் விஜய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறிய தகவலை பகிர்ந்துள்ளார்.
பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் ஜான் விஜய்யால் பாலியல் தொல்லைக்கு ஆளான ஒரு பெண் குறித்த தகவலை பிரபல பெண் பத்திரிகையாளர் பதிவு செய்ததை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘ நடிகர் ஜான்விஜய் அடிக்கடி சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு வருவார் என்றும் அங்கு வரும் பெண்களை அவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் மறுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தான் ஒரு செலிபிரிட்டி என்பதால் தனக்கு பெண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் ,அவரிடம் எந்த பெண்ணும் பேச விரும்பவில்லை என்றாலும் அவர் தொல்லை நீடித்துக் கொண்டே இருக்கும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு ஜான் விஜய் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More on John Vijay from others who read the post.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 26, 2024
One of them interviewed him on camera. pic.twitter.com/md6TkyYNJn
How is this surprising anymore?
— Dhanya Rajendran (@dhanyarajendran) July 26, 2024
My colleague had a horrible experience with John Vijay. I remember her call right after it. After a lot of discussion, we told her to decide what to do. She wrote it in the story, as it highlights how things haven’t changed in the film industry.… https://t.co/9CXe52M8v2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments