பாலியல் புகாரில் வைரமுத்து: சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக தன்னுடைய இளவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த கசப்பான அனுபவத்தையும், தனக்கு நெருக்கமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் அசம்பாவித சம்பவங்களையும் கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்த வகையில் தற்போது அதிர்ச்சியின் உச்சத்தில் கவியரசர் வைரமுத்து மீது ஒரு பெண் பத்திரிகையாளர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை தனது சமூக வலைத்தளத்தில் சின்மயி பகிர்ந்துள்ளார்.
சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிகையாளர் வைரமுத்துவுடன் பணிபுரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக குறிப்பிட்டுள்ளதை சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருசிலர் இதை எப்படி நம்புவது என்ற கேள்விக்கு 'இது நடந்தது உண்மை' என்றும் சின்மயி விளக்கமளித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு கவியரசர் வைரமுத்து என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com